» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அறநிலையத்துறையை கண்டித்து சுவரொட்டிகள்: தென்காசியில் பரபரப்பு

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 5:48:13 PM (IST)திருநெல்வேலி டவுண் பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை முறைகேடாக ஏலம் விட்டதாகவும், அதனை ரத்து செய்யக்கோரியும் தென்காசி நகர் முழுவதும் கண்டன சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி டவுண் பிள்ளையன் கட்டளைக்கு சொந்தமான இடம் தென்காசி வடக்கு ரதவீதியில் உள்ளது. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு .இந்த சொத்துக்களை ஏலம் விடப்போவதாக நெல்லை பிள்ளையன் கட்டளை சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. அதன்படி ஏலமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடம் ஏலம் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அந்த ஏலம் மாற்று மதத்தினருக்கு விடப்பட்டிருப்பதாகவும் இதனால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தென்காசி இந்து ஆலய விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தென்காசி நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.  இதனால் தென்காசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

சங்கரசுப்பிரமணியன்Feb 15, 2018 - 02:22:25 PM | Posted IP 160.2*****

ஏற்கனவே தென்காசி நகரில் கோவில் இடங்களை மாற்று மதத்தினருக்கு வழங்கியதால் பிரச்சனை உள்ளது தற்போது இது நீடித்தால் தென்காசி யில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது இதில் பணம் பெற்று கொண்டு ஏலம் விட்ட அதிகாரிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory