» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அரசு மருத்துவமனையில் நர்ஸ்கள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 6:34:07 PM (IST)

நெல்லை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா வெள்ள கோவில் அரசு மருத்துவமனை செவிலியரான மணிமாலா பள்ளி மாணவ, மாணவியர்க ளுக்கு உடல் பரிசோதனை முகாமில், மருத்துவர் சக்தி அகிலாண்டே ஸ்வரியுடன் பங்கேற்றார் அவர்களது தலைமை மருத்துவர் தமயந்தி. இந்நிலையில் கடந்த சனியன்று இரவு மருத்துவமனை குடியிருப்பில் மணிமாலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வெள்ள கோவில் காவல் துறையினர் விசாரனை செய்து வருகின்றனர். மணிமாலா பிரேதத்தை பார்த்த உறவினர்கள் அவரது கழுத்தில் காயம் உள்ளதாகவும், அதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று புகார் கொடுத்துள்ளனர்.

அதே போல மருத்துவர்கள் தமயந்தி, சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகிய இரண்டுபேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர் மேலதிகாரிகளின் டார்சரால் தான் மணிமாலா (26) தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தி ற்கு இரங்கல் செலுத்தும் வகையில் நெல்லை தலைமை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் பயிற்சி செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மருத்துவமனை முன் கண்டன கோஷம் எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory