» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டையில் 18 ம் தேதி ஓவியப்போட்டிகள்

புதன் 14, பிப்ரவரி 2018 11:49:47 AM (IST)

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பாளையங்கோட்டை காந்திமதி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (18 ம் தேதி) சுவர் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி, மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாராயணன் நாயர் அறிவுறுத்தலின்படி இந்தப் போட்டி நடைபெறுகிறது. தூய்மை இந்தியா இயக்கம் என்னும் தலைப்பில் காலை 8 மணி பகல் 12 மணி வரை சுவர் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரும் 16-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory