» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி பகுதி கோவில்களில் சிவராத்திரி வழிபாடு

புதன் 14, பிப்ரவரி 2018 11:56:44 AM (IST)தென்காசி பகுதி கோவில்களில் பிரதோஷம், தமிழ் மாதப்பிறப்பு மற்றும் சிவராத்திரி வழிபாடு நடைபெற்றதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

இந்த ஆண்டு பிரதோஷம், தமிழ் மாதப் பிறப்பு மற்றும் மகாசிவராத்திரி ஒரே நாளில் வந்துள்ளது. இம்மூன்று வழிபாடுகளும் கோவில்களில் நேற்று நடைபெற்றன. தென்காசி உடனுறை காசிவிசுவநாதர் கோவிலில் காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிசேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் நந்திக்கு மாபொடி, மஞ்சள்பொடி, திரவியம், பால், தயிர், இளநீர், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான நறுமணப் பொருட்களால் மகாபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் நந்திக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதன் பின் சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உள் பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தமிழ்மாதப்பிறப்பு, பிரதோஷ வழிபாடு முடிந்ததும் இரவு மகாசிவராத்திரி வழிபாடு துவங்கியது. இன்று காலை வரை நான்கு கால பூஜை வழிபாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய விழித்திருந்து மகாசிவராத்திரி வழிபாட்டில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். ரதவீதிகளில் பக்தர்களின் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தன. கோவில் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தென்காசி குலசேகரநாதர்கோவில், குற்றாலம் குற்றாலநாதர்கோவில், செங்கோட்டை சிவன்கோவில் மற்றும் தென்காசி, செங்கோட்டை வட்டாரப்பகுதியில் உள்ள கோவில்களில் பிரதோ~, தமிழ்மாதப்பிறப்பு மற்றும் மகாசிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. 

பண்பொழி திருமலைக்குமாரசுவாமிகோவில், இலஞ்சி குமாரர்கோவிலில் தமிழ்மாதப் பிறப்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். குத்துக்கல்வலசை பசிதுஷ்டராயகண்ட விநாயகர் கோவில், காளியம்மன் கோவில், அழகுநாச்சிஅம்மன் கோவில், சக்திவிநாயகர் முத்துமாரியம்மன் கோவில் மற்றும் சுபிட்ச வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory