» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போதைப்பொருட்கள் கடத்த முயற்சி : இரண்டு பேர் கைது

புதன் 14, பிப்ரவரி 2018 12:04:58 PM (IST)

நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் 15000 மதிப்புள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் புளியரை வழியே அடிக்கடி கேரளாவிற்கு பொருட்கள் கடத்தப்படுகிறது.இதனால் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.இந்நிலையில் சம்பவத்தன்று புளியரையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியே வந்த லோடு ஆட்டோ வை நிறுத்தி சோதனையிட்டதில் 15000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் கேரளமாநிலம் கொல்லத்தை சேர்ந்த சுலைமான் குஞ்சு (55),சிவன் குட்டி (50) ஆகிய இருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory