» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிஎஸ்என் கல்லூரியில் தேசியவிளையாட்டு போட்டிகள் : நாளை தொடக்கம்

புதன் 14, பிப்ரவரி 2018 12:26:34 PM (IST)

நெல்லை அருகே மேலத்திடியூரில் உள்ள பி.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய போட்டிகள் பிப் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. 

முதல் நாள் (15ந் தேதி) விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட எஸ்பி., அருண்சக்திகுமார் கலந்து கொண்டு விளையாட்டு விழாவை துவக்கி வைக்கிறார்.விழாவில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பாஸ்கர், பி.எஸ்.என் கல்வி குழும சட்ட ஆலோசகர் ராமகிருஷ்ணன் , பி எஸ்.என் கல்வி குழும தலைவர் சுயம்பு, தாளாளர் ருக்மணிசுயம்பு, துணைத் தலைவர்கள் பொறியாளர் ராஜா, பொறியாளர் ஜெயலட்சுமி ராஜா, பொறியாளர் ஜெகநாத் , பொறியாளர் ஜெயராம், செயல் இயக்குநர் தம்பிதுரை, கல்லூரி முதல்வர்கள் பாலக்குமார், சக்திவேல், ரவிக்குமார், தங்கத்துரை , உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். 

போட்டியில் முதல் பரிசு ரூ.15000 மற்றும் சுழற்கோப்பையும் , இரண்டாம் பரிசு ரூ. 10,000 மற்றும் சுழற்கோப்பையும் மூன்றாம் பரிசு 7000 , 4வது பரிசு ரூ 5000 வழங்கப்படுகிறது. போட்டியில் தேசிய அளவில் பங்கேற்கும் வீரர்கள் , வீராங்கனைகள் அடங்கிய 250 அணிகள் கலந்து கொள்கின்றனர். விளையாட்டில் பங்கேற்க வருகை தரும் வீரர்கள், வீராங்கனை களுக்கு தங்கும் இடவசதி , வாகன வசதி சாப்பாடு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது இவ்விளையாட்டு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரகு , கல்லூரி முதன்மை உடற்கல்வி இயக்குனர் சிவா, மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள், கல்லூரி நிர்வாகம் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory