» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காதலர் தின கொண்டாட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் : நெல்லையில் பரபரப்பு

புதன் 14, பிப்ரவரி 2018 1:05:57 PM (IST)

நெல்லையில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து இருந்தது. 

நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புறாக்களை பறக்க விட்டும்பலுன்களை பறக்கவிட்டும் காதலர் தினத்தை கோலாகலமாக கொண்டாடினார். சிலர் 50 தாலியுடன் அறிவியல் மையத்துக்கு சென்று காதலர்களை விரட்டியடித்து காதலர் தினத்தை ஒதுக்கினார்கள்.நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காதலர்தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சந்திப்பு பகுதியில் ஒலி பெருக்கிகளை வைத்து காதல் திரைப்பட பாடல்களை ஒலித்தும், காதலர்களின் சின்னத்தை பறக்க விட்டும் காதலர் தினத்தை கொண்டாடினர்.நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து ஜோடி புறாக்கள் பறக்க விட்டு காதலர் தினத்துக்கு ஆதரவு தெரித்தனர் மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.அதே சமயத்தில் மாவட்ட அறிவியல் மையத்திற்கு வரும் காதலர்களுகக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி உடையார் தலைமையில் சிலர் 50 தாலியுடன் காதலர்களை விரட்டியடித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory