» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் 17 ம் தேதி வங்கிகடன் முகாம்

புதன் 14, பிப்ரவரி 2018 7:58:57 PM (IST)

திருநெல்வேலியில் வங்கிகடன் முகாம் வரும் 17 ம் தேதியன்று நடைபெறுகிறது.

2016 – 2017 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று முடித்த மாணவ / மாணவியர்கள் உயர்கல்வியினை தொடர்ந்த நிலையில் கல்விக்கடன் பெறுவதற்கு வங்கியில் விண்ணப்பித்து தொகை பெறப்படாத மாணவர்க ளுக்காக சிறப்பு கல்வி கடன் முகாம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்துாரி தலைமையில் 17.02.2018 காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. 

இம்முகாமில் அனைத்து வங்கி மேலாளர்கள் கல்லூரி கல்வி இணை இயக்குநர், மாவட்ட கல்வி  அலுவலர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். திருநெ ல்வேலி மாவட்டத்தில் பயின்று வரும் கல்லூரி மாணவர் / மாணவியர்கள் கல்வி கடன் பற்றிய முழுமையான விபரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory