» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நீதிமன்றத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய சிறுவர்கள் கைது : திருநெல்வேலியில் பரபரப்பு

சனி 17, பிப்ரவரி 2018 11:07:29 AM (IST)

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 4 பேர் கைது  செய்யப்பட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முத்துலிங்கம் என்பவரது மகன் பரமசிவன் (24).அதே ஊரை சேர்ந்த உடையார் மகன் முத்துசெல்வம் (20),பாரதி (20).திருநெல்வேலி டவுனை சேர்ந்த ஸ்ரீதர் மகன் திலிப் (17).இவர்கள் நான்கு பேரும் சம்பவத்தன்று திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்றத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்துள்ளனர்.இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் நான்கு பேரையும் மடக்கி பிடித்து விசாரித்ததில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொலை வழக்கு தொடர்பாக ஆஜராக வந்தவருக்கு பாதுகாப்புக்காக வந்ததாக தெரிவித்துள்ளனர்.பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory