» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

புதன் 21, பிப்ரவரி 2018 2:24:14 PM (IST)

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த கணவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பரமேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா என்பவர மகன் சுடலைகுமார் (28). கூலி தொழிலாளி. இவருக்கு பொன்செல்வி என்ற மனைவியும் இரண்டு வயதில் மகன் உள்ளார்.சுடலைகுமார்க்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.இதனால் அவரது மனைவி கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

சுடலைகுமார் அங்கு சென்று மனைவியை தன்னுடன் வருமாறு அழை த்துள்ளார். ஆனால் குடிப்பழக்கத்தை விட்டால் வரத்தயாராக இருப்பதாக பொன் செல்வி தெரிவித்துள்ளார்.இதனால் வீட்டிற்கு வந்த சுடலைகுமார் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory