» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

துாய்மை பள்ளி விருது பெற்று அரசு பள்ளி சாதனை

புதன் 21, பிப்ரவரி 2018 6:19:08 PM (IST)



சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நெல்லை புத்தக திருவிழா கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்துராஜ் திட்டத்தின் கீழ் சுத்தம் புத்தகம் தரும் என்ற போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்ற சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தூய்மை பள்ளி என்ற விருதை பெற்றது.

இந்த விருதை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம் முன்னிலையில் சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி வழங்கினார். மேலும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது. விருது மற்றும் புத்தகங்களை சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஜெயந்திராணி பெற்றுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory