» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடும்ப பிரச்சனையால் தொழிலதிபர் தற்கொலை : திருநெல்வேலியில் பரபரப்பு

சனி 10, மார்ச் 2018 10:14:36 AM (IST)

நெல்லையில் டாஸ்மாக் பார் உரிமையாளர்  குடும்ப பிரச்னை காரணமாக துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திசையன்விளை அருகே உள்ள நாலாந்தா கிராமத்தைச் சேர்ந்தவர், துரைப்பாண்டியன். (55) சென்னை விருகம்பாக்கத்தில் மனைவி அமச்சி யார், மகன்கள் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். அத்துடன், நெல்லையில் டாஸ்மாக் மதுக்கடை  பார் நடத்தி வந்தார்.

மூத்த மகனின் திருமண ஏற்பாடுக்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் நெல்லைக்கு வந்துள்ளார்.நெல்லையில் சி.என்.கிராமத்தில் குறுக்குத்துறை மெயின்ரோடு பகுதியில் உள்ள வீட்டில் அவர் தங்கியிருந்து உறவினர்களைச் சந்தித்து வந்தார். இந்த நிலையில் இரவு அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அச்சமுற்ற கார் டிரைவர் அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது நெஞ்சில் குண்டு காயத்துடன் அவர் உயிருக்கு போராடியிருக்கிறார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

துரைப்பாண்டியன் குடும்ப பிரச்னை மற்றும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த தற்கொலைச் சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory