» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வள்ளியூரில் இலவச வைபை : ஆட்சியர் துவக்கி வைப்பு

செவ்வாய் 13, மார்ச் 2018 1:55:35 PM (IST)திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இலவச (வைபை) இணையதள சேவை வசதியினை பொது மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இலவச (வைபை) இணையதள சேவை வசதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று (13.03.2018) திறந்து வைத்தார்.பின்னர், ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-தமிழகத்தில் முதன் முறையாக திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், வள்ளியூர் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இலவச (வைபை) இணையதள சேவை வசதியினை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இச்சேவையினை பயன்படுத்தி, மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவை யான இணையதள புத்தகங்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் தங்களுக்கு தேவையான வேளாண்மை குறித்த தகவல்களை இணையதளம் மற்றும் வழிகாட்டுதல் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இணையதள வசதியானது சுமார் 300 மீட்டர் சுற்று பரப்பளவில் இணையதள சேவையினை பயன்படுத்த முடியும்.

ஒரே நேரத்தில் 500 நபர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம். 24 மணி நேரத்திற்கு ஒரு நபர் 10 எம்பி வேகத்தில் 400 எம்பி உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மேலும், பேருந்து நிலையத்தில், இணையதள சேவையினை எவ்வாறு பயன்படுத்துவது என்று பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், தாெடு திரைகள் மூலம் செயல்முறைகள் திரையிட்டு காண்பிக்கப்படும். இச்சேவை பயன்பாட்டினை கருத்திற் கொண்டு, இனிவரும் காலங்களில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து பேருந்து நிலையங்களில் இலவச (வைபை) இணையதள சேவை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, முக்கிய பிரமுகர்கள் அழகானந்தம், அந்தோணி அமலராஜா, தவசிமுத்து, வள்ளியூர் பேரூராட்சி அலுவலக கண்காணிப்பாளர் ராஜேஸ்வரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory