» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருச்செந்தூர் ஹோட்டல்களில் வருமானவரித் துறை சோதனை

செவ்வாய் 13, மார்ச் 2018 3:23:48 PM (IST)

திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள பிரபல ஹோட்டல்களில் வரு­மான வரித்­து­றை­யி­னர் திடீர் சோதனை நடத்­தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்­தி­யா­வில் ஜி.எஸ்.டி. வரி அமல்­ப­டுத்­தப்­பட்ட பிறகு தமி­ழ­கத்­தில் வரு­மா­னத்­திற்கு மீறி சொத்து சேர்த்­த­தாக புகார் கூறப்­பட்ட பல்­வேறு நிறு­வ­னங்­க­ளில் வரு­மான வரித் துறை­யி­னர் அதி­ர­டி­யாக சோதனை நடத்தி வரு­கின்­ற­னர். திருச்­செந்­துா­ரில் கடந்த சில நாட்­க­ளுக்கு முன்பு பிர­பல ஹோட்­டல் நிறு­வ­னம் ஒன்­றில் வரு­மான வரி துறை­யி­னர் மூன்று நாட்­கள் முகா­மிட்டு சோதனை நடத்­தி­னர். இந்த சம்­ப­வம் பர­ப­ரப்­பாக பேசப்­பட்­டது. 

இந்நிலையில், இன்று திருச்­செந்­துா­ரில் உள்ள ஹோட்­டல்க­ளில் திடீ­ரென வரு­மான வரித்­து­றை­யி­னர் சோதனை நடத்­தி­னர். துாத்­துக்­கு­டி­யி­லி­ருந்த காரில் வந்த வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள்  10க்கும் மேற்­பட்­ட­வர்­கள் இரு பிரி­வு­க­ளாக பிரிந்து இந்த சோத­னையை மேற்­கொண்­ட­னர். இந்த சோதனை மதியம் 12.30 மணிக்கு துவங்கி தொடர்ந்து நடந்­தது. இந்த சோத­னை­யில் பல்­வேறு ஆவ­ணங்­கங்­களை கைப்­பற்றி வரு­மான வரித் துறை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.  இந்த திடீர் சோத­னை­யால் திருச்­செந்­துா­ரில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.  


மக்கள் கருத்து

முருகன் அய்யர்Mar 13, 2018 - 03:50:08 PM | Posted IP 171.4*****

தக்கார் பதவி பறிப்பு பழிவாங்குதல்ல ? அந்த முருகனுக்கு தான் தெரியும் ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory