» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்பையில் இலவச எலும்புமுறிவு மருத்துவ முகாம்

செவ்வாய் 13, மார்ச் 2018 5:31:24 PM (IST)



அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற இலவச எலும்பு முறிவு சிகிச்சை முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் டிஎன்விஎஸ் ரத்த தான கழகம், பிடிஎம்பி பள்ளி, நெல்லை ஷிபா மருத்துவமனை ஆகியவற்றுடன் ரோட்டரி சங்கம் இணைந்து இலவச எலும்பு சிகிச்சை முகாமை நடத்தியது. சந்தை பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். ஆலோசனைக்குழு உறுப்பினர் அமீர்கான் முன்னிலை வகித்தார்.

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களை பரிசோதனை செய்த ஷிபா மருத்துவமனை டாக்டர்கள் பாலசுப்பிரமணியன், கஜலட்சுமி ஆகியோர் மருத்துவ ஆலோசனை வழங்கினர். ரோட்டரி சங்க செயலாளர் சிவசைலம் வாழ்த்துரை வழங்கினார். முகாமில் ரத்த தான கழகம், அன்னை டிரஸட், சாப்ட் டிரஸ்ட், அப்துல்கலாம் நண்பர்கள் குழு ஆகிய தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாகராஜன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory