» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமண பத்திரிகை கொடுக்க சென்ற பெண் சாவு : விஜயநாராயணத்தில் விபத்து

செவ்வாய் 13, மார்ச் 2018 5:44:43 PM (IST)

விஜயநாராயணத்தில் மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க சென்ற அவரது தாயார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாளையங்கோட்டை என்ஜிஓ பி காலனியை சேர்ந்த மாடசாமி.இவரது மனைவி மாரியம்மாள் (45).இவர்களுக்கு உதய்,ஆறுமுகதேவி,தமிழ்தேவி என்ற மூன்று வாரிசுகள் உள்ளனர்.அனைவரும் வழக்கறிஞர்கள்.இதில் ஆறுமுகதேவிக்கு வரும் 19 ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.இதை முன்னிட்டு மாடசாமியும்,மாரியம்மாளும் திசையன்விளை ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே தங்களது சொந்த ஊரில் குலதெய்வத்திற்கும், சொந்தங்களுக்கும் பத்திரிகை வைத்து விட்டு மோட்டார் பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர்.

விஜயநாராயணம் அருகே வரும் போது எதிரே பரப்பாடியை சேர்ந்த ராஜதீபன் என்பவர் ஓட்டி வந்த பைக்கும்,மாடசாமி சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.இதில் மாடசாமி தம்பதியினர் பாளை.,ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கும்,ராஜதீபன் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரியம்மாள் உயிரிழந்தார்.மகள் திருமணத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் மாரியம்மாள் இறந்ததால் அவரது மகள்கள்,மற்றும் மகன் அழுதது பாிதாபமாக இருந்தது. இவ்விபத்து குறித்து விஜயநாராயணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory