» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கனமழை : பாபநாசம் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு

செவ்வாய் 13, மார்ச் 2018 6:46:04 PM (IST)

அம்பை, வி.கே.புரம், பாபநாசம் பகுதியில் இன்று பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது.

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீ.கே.புரம், சேரன்மகாதேவி பகுதிகளில் நேற்று மதியம் கனமழை 1 மணி நேரம் பெய்தது.இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்திலும் கனமழை கொட்டியது. ஏற்கனவே பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அதன் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து இன்று காலையில் 27 அடியாக இருந்தது. 

இந்நிலையில் இன்று காலை முதல் விட்டுவிட்டு பெய்த கனமழையால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கவும், அதனால் நீர்மட்டம் சிறிது உயரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.தற்போது நெல் அறுவடை காலம் முடிந்த நிலையில் அடுத்த பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்க உள்ளனர்.நேற்றும், இன்றும் பெய்த மழையால் அறுவடை முடிந்த நிலங்களில் உழவு பணியை தொடங்கி உள்ளனர். இரண்டு நாட்கள் பெய்த மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் சிறிது உயரும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory