» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதன் 14, மார்ச் 2018 10:59:46 AM (IST)லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கண்டித்து கடையத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய நியமனத்திற்கு ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை லஞ்சம், மாதந்தோறும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களிடம் பணம் வசூல் செய்வது, மினி மையத்தில் இருந்து மெயின் மையத்திற்கு பணிமாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரைர லஞ்சம்,  இதை வழங்க மறுக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஆய்வு கூட்டத்தில் தண்டனை வழங்கும் கடையம்  வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் அதற்கு  துணை போகும் மாவட்ட திட்ட அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள்  கடையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கடையம் வட்டார தலைவி லட்சுமி தலைமை தாங்கினார். ரெஜினா, ரூபி, அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநிலக்குழு உறுப்பினர் தாட்சாயிணி, மாவட்ட துணைத்தலைவர் விஜயா ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் மோகன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ராதா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory