» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரநாராயணர் கோவிலில் ரெங்கசாமி சுவாமி தரிசனம்

புதன் 14, மார்ச் 2018 11:32:38 AM (IST)

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ரெங்கசாமி நேற்று தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தார்.

புதுவை முன்னாள் முதல்வர் ரெங்கசாமி நேற்று இரவு சங்கரன்கோவில் வந்தார். அங்குள்ள‌ சங்கரநாராயணர் கோவிலுக்கு சென்றார். கோவிலுக்கு வந்த ரெங்கசாமி,கோமதி அம்மன் தங்ததேரை வடம் பிடித்து இழுத்தார்.அதனை தொடர்ந்து கோவிலின் உள்ளே உள்ள சன்னதிகளில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கோமதிஅம்மன் கோவிலில் உள்ள கொடிமரம் அருகே 108 விளக்கேற்றி வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து 108 முறை சுற்றினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory