» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மழையால் களக்காட்டில் அறுவடை பணிகள் பாதிப்பு

புதன் 14, மார்ச் 2018 11:54:23 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இரு தினங்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருவதால், களக்காடு பகுதியில் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

களக்காடு வட்டாரத்தில் பெய்த திடீர் மழையால், கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நெல் அறுவடைப் பணிகள் பாதிப்படைந்துள்ளன. நெல் பயிர் சாய்ந்துள்ளதாலும், ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும், அறுவடைப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். ஆனால், வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 3 மாதங்களாக வாழை விவசாயிகளுக்கு மழை பெய்யாததால் வாழைத்தார்கள் போதிய விளைச்சலின்றி பாதிக்கப்பட்டன. தற்போது பெய்துள்ள மழையால் வாழைத்தார்கள் நல்ல விளைச்சலை எட்ட வாய்ப்பிருப்பதாக வாழை விவசாயிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory