» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு வங்கி நிர்வாகம் மீது இளைஞர் போலீசில் புகார்

புதன் 14, மார்ச் 2018 12:25:39 PM (IST)

கரிவலம்வந்தநல்லுார் அருகே வங்கியால் பறிமுதல் செய்யப்பட்ட தனது காரிலிருந்த பணத்தை காணவில்லை என காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் அருகே செந்தட்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (34).இவர் தாட்கோ மூலம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கார் வாங்குவதற்காக 12 லட்ச ரூபாய் லோன் வாங்கி னாராம்.இதில் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டுமே திருப்பி செலுத்தியதாகவும் அதன் பிறகு பணம் திரும்ப செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது காரை வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்துள்ளது. 

இந்நிலையில் கரிவலம்வந்தநல்லுார் காவல்நிலையத்தில் தமிழ்ச்செல்வன் அளித்த புகாரில் வங்கி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தனது காரில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்ததாகவும் அந்த பணத்தை காணவில்லை.எனவே அதை மீட்டு தர வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory