» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மின்சாரம் தாக்கியதில் விபத்து : ஐஸ் வியாபாரி பலி

புதன் 14, மார்ச் 2018 6:45:59 PM (IST)

அம்பாசமுத்திரம் அருகே மின்சாரம் தாக்கியதில் ஐஸ் வியாபாரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஊர்க்காடு பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். அவர்களில் பிரேம்லால் என்பவரின் மகன் உதயலால்(17) என்பவர் குல்பி ஐஸ் தயாரித்து விற்று வந்தார். இவர் இன்று காலையில் ஐஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் உதயலால் உடல் கருகி உயிருக்கு போராடினார். உடனடியாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீசார் வழககுப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory