» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவி கழுத்தை அறுத்த கணவனுக்கு போலீஸ் வலை

புதன் 14, மார்ச் 2018 8:39:22 PM (IST)

விகே புரத்தில் குடும்ப தகராறில் மனைவி கழுத்தை அறுத்த கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (26).கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (22).இவர்களுக்கு திருமணமாகி சுமார் 4 மாதங்களே ஆன நிலையில் ராஜேஸ்வரிக்கு சொந்தமான சுமார் 5 பவுன் நகையை பாக்கியராஜ் அடகு வைத்து விட்டாராம்.பாக்கியராஜின் சகோதரர் வீடு வி.கே புரத்தில் உள்ளது.அங்கு தம்பதியினர் விருந்துக்காக சென்றுள்ளனர். அங்கு வைத்து அடகு வைத்த தனது நகையை ராஜேஸ்வரி திரும்ப கேட்டுள்ளார்.இதில் வாக்குவாதம் ஆகவே கோபமடைந்த பாக்கியராஜ் தனது மனைவி கழுத்தை அறுக்க முயன்றுள்ளார்.

இதில் வலி தாங்காமல் ராஜேஸ்வரி அலறவே,சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்த பாக்கியராஜ் தப்பியோடி விட்டார்.தொடர்ந்து இது குறித்து விகே புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார் அங்கு வந்து காயமடைந்த ராஜேஸ்வரியை பாளை ஹகிரவுண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து தப்பியோடிய பாக்கியராஜை தேடி வருகி ன்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory