» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிவகிரி அருகே காரும் லாரியும் மோதிய விபத்து : ஏழு பேர் உயிரிழப்பு

சனி 7, ஏப்ரல் 2018 2:07:43 PM (IST)

சிவகிரி அருகே காரும் லாரியும் மோதிய விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

பெங்களுரு வித்யனாபுரம் சொத்த பொம்ம சந்திரா பகுதியை சேர்ந்த சந்திரகவுடா என்பவர் தன் குடும்பத்தாருடன் 2 கார்களில் மதுரை, நெல்லை,கன்னியாகுமரி மற்றும் பத்மநாப சுவாமி கோவில் ஆகியவற்றை தரிசித்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.இதில் செங்கோட்டை வழியே வந்து கொல்லம் திருமங்கலம் சாலையில் சிவகிரி அருகே செல்லும் போது அவர்களின் காரும் விழுப்புரம் கள்ளக்குறிச்சி யிலிருந்து செங்கோட்டைக்கு சீனி ஏற்றி வந்த லாரியும் மாேதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் வந்த சந்திரகவுடா, ரத்னா,க லாவதி ,தாரா, தீக்ஷிதா,மகேஷ்,பிரவீன் ஆகிய 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் சாந்தா லட்சுமி,நாராயணன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.இறந்தவர்கள் உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனையிலும்,படுகாயமடைந்தோர் சிகிச்சை க்காக மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதி க்கப்ப ட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேட்டூர் போலீசார் லாரி டிரைவர் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory