» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காவேரி வாரியம் கோரி பேருந்திலிருந்து குதித்தவர் மரணம்

திங்கள் 9, ஏப்ரல் 2018 7:05:34 PM (IST)

நெல்லையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த 5 – ந்தேதி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வம் , இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கோவைகுளத்தை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி  கடந்த 5 ஆம் தேதி செல்வம் மது போதையில் இருந்தபோது, நெல்லை சந்திப்பில் இருந்து கோவை குளம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார். பேருந்து டக்கரம்மாள்புரம் அருகே சென்றுபோது திடீரென செல்வம் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமையுங்கள் என்று உரக்க கத்தியபடியே ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்தார்.

இதையடுத்து பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு செல்வம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் செல்வம் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory