» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாலியல் வழக்கு இங்கிலாந்து பாதிரியாருக்கு மூன்று ஆண்டுசிறை : வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 13, ஏப்ரல் 2018 6:37:50 PM (IST)

பாலியல் வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த பாதிரியார் ஜோனதன் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருநெல்வேலி, வள்ளியூரை அடுத்த சின்னம்மாள்புரத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் ஆதரவற்ற சிறுவர் இல்லத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஜோனதன் ராபின்சன் என்ற பாதிரியார் நடத்திவந்தார். 2012 ஆகஸ்ட்டில் அங்குள்ள சில மாணவர்களை டில்லி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்சென்ற போது அங்கு அவர்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ராபின்சன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. 

பாதிக்கப்பட்ட 9ம் வகுப்பு சிறுவனை மீட்டு நெல்லை சரணாலயத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த சிறுவர் இல்லம் மூடப்பட்டது. அந்த சம்பவத்திற்கு பிறகு ராபின்சன், இங்கிலாந்து சென்றுவிட்டார். இது தொடர்பான வழக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கில் பாதிரியார் ஜோனதன் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory