» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சந்திராயன் 2 செயற்கைகோளில் ரோபா பயணிக்கிறது : நெல்லையில் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

ஞாயிறு 15, ஏப்ரல் 2018 12:18:22 PM (IST)

சந்திராயன் 2 செயற்கைகோளில் ரோபா பயணிக்கிறது என திரு நெல்வேலியில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோமைய தலைவர் சிவன் கூறினார்.

திருநெல்வேலியில் ரூ.82 கோடி மதிப்பிலான இந்திய செயற்கைகோள் தகவல் சேகரிப்பு மைய கட்டடத்தின் பணிகளை இஸ்ரோ தலைவர் சிவன் துவக்கி வைத்தார். நெல்லை அரசு பொறியியல் கல்லுாரி எதிரே 82 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய செயற்கை கோள் தகவல் சேகரிப்பு மைய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் பணிகள் நடைபெற்றது.

அப்பணிகளை இன்று இஸ்ரோமையத்தின் தலைவர் சிவன் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும் போது, தமிழ்நாட்டில் முதன்முறையாக இத்தகைய மையம் துவக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வட இந்தியாவில் இது போன்ற மையங்கள் நிறைய உள்ளது. இந்த மையத்தின் மூலம் செயற்கை கோள் தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும். ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

சந்திராயன் 2 செயற்கைகோள் இந்த வருட இறுதிக்குள் ஏவப்படும். இதில் ரோபா செல்கிறது. அந்த ரோபா மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து முடிவுகளை உடனே கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி விடும். பிரதமர் மோடி அறிவித்தப்படி 150 திட்டங்களுக்கு உதவும்படியான செயற்கை கோள்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜி சாட் 11 மற்றும் 21 ஆகிய இரு செயற்கை கோள்களின் வேகத்தை அதிகரிக்கப்படும். சாமானியர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory