» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையில் புதிய அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா
ஞாயிறு 15, ஏப்ரல் 2018 1:57:45 PM (IST)

பாளையங்கோட்டையில் ஏ.ஆர்.பில்டிங் வளாகத்தில் புதிய அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா நடைபெற்றது.
நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் எல்.ஐ.சி. எதிரில் ஏ.ஆர்.பில்டிங் வளாகத்தில் அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா நடைபெற்றது. இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை நடந்தது. ஆத்தூர் மணி குழுமங்களின் தலைவர் ஆத்தூர்.மா.மணி, மாரியம்மாள் மணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை இளமதி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ஆதம், முத்துராம் தியேட்டர் உரிமையாளர் காசிப்பாண்டியன், ஏ.ஆர்.பில்டிங் உரிமையாளர் மணிகன்டன், இன்னோவேட்டிவ் மோட்டார்ஸ் உரிமையாளர் முத்துசாமி, முன்னாள் மண்டல தலைவர் எம்.சி.ராஜன், அதிமுக பிரமுகர் ஜோதிபரமசிவம், ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல், வழக்கறிஞர் துரை முத்துராஜ், போத்தீஸ் ராமசாமி மற்றும் வணிகர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை மா.நடராஜன் மாரியம்மாள் வரவேற்றனர். விழா ஏற்பாடுகளை பொதுமேலாளர் மாணிக்க செல்வம் மற்றும் கிளை மேலாளர்கள் செய்திருந்தனர்.

மண் பானையில் தயார் ஆகும் கிராமிய உணவு வகைகள்
புதிய ஓட்டல் தாமிராவின் சிறப்பு குறித்து ஆத்தூர் மணி குழுமங்களின் தலைவர் ஆத்தூர்.மா.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களது ஓட்டல் தாமிராவில், கிராமிய பாரம்பரிய சுவையில் செட்டி நாடு உணவு வகைகள், சைனீஷ், தந்தூரி, அரேபியன் உணவு வகைகள் மற்று தென்னிந்திய உணவு வகைகள் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். சிறப்பு அம்சமாக பெண்களின் கை வண்ணத்தில் பல கிராமிய உணவு வகைகள், மீன் குழம்பு ஆகியவற்றை மண் பானைகளில் தயார் செய்து வழங்குகின்றனர்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப எடை போட்டும் விற்பனை செய்கிறோம். எங்களின் அனைத்து ஓட்டல்களிளும் உணவுப் பொருட்களில் உடல்நலத்திற்கு எதிரான அஜினமோட்டா, அழகுபடுத்த கலர் பொடிகள் உபயோகப்படுத்துவதில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், தாமிரா ஓட்டலில் பிறந்த நாள், கல்யாண நாள், பணி நிறைவு நாள், வளைகாப்பு போன்ற விழாக்களில் குடும்பத்தினரின் சிறிய விருந்தோம்பல் நிகழ்ச்சிகளுக்கு பொதிகை ஏ.சி.ஹால் வசதி உள்ளது. இதில், 50பேர் அமரும் வசதி உள்ளது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புனித நீர் ஊர்வலம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி : திருநெல்வேலியில் நடைபெற்றது
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 12:29:31 PM (IST)

பாபநாசம்,சேர்வலாறு அணைகளின் நீர் இருப்பு விபரம்
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 12:02:05 PM (IST)

மேய்ச்சலுக்காக வீட்டிற்குள் புகுந்தது புள்ளிமான் : பாவூர்சத்திரம் அருகே பரபரப்பு
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 11:19:20 AM (IST)

பாளையங்கோட்டை மெட்ரிக் பள்ளியில் பணம் திருட்டு : போலீஸ் விசாரணை
சனி 21, ஏப்ரல் 2018 6:53:40 PM (IST)

குடும்பத் தகராறில் மனைவியை கொன்றவர் சரண்
சனி 21, ஏப்ரல் 2018 6:30:35 PM (IST)

பாரத்கேஸ் சார்பில் ராஜாங்கபுரத்தில் உஜ்வலா தினம்
சனி 21, ஏப்ரல் 2018 6:00:11 PM (IST)
