» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையில் புதிய அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா

ஞாயிறு 15, ஏப்ரல் 2018 2:03:51 PM (IST)பாளையங்கோட்டையில் ஏ.ஆர்.பில்டிங் வளாகத்தில் புதிய அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா நடைபெற்றது. 

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் எல்.ஐ.சி. எதிரில் ஏ.ஆர்.பில்டிங் வளாகத்தில் அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா நடைபெற்றது. இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை நடந்தது. ஆத்தூர் மணி குழுமங்களின் தலைவர் ஆத்தூர்.மா.மணி, மாரியம்மாள் மணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை இளமதி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ஆதம், முத்துராம் தியேட்டர் உரிமையாளர் காசிப்பாண்டியன், ஏ.ஆர்.பில்டிங் உரிமையாளர் மணிகன்டன், இன்னோவேட்டிவ் மோட்டார்ஸ் உரிமையாளர் முத்துசாமி, முன்னாள் மண்டல தலைவர் எம்.சி.ராஜன், அதிமுக பிரமுகர் ஜோதிபரமசிவம், ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல், வழக்கறிஞர் துரை முத்துராஜ், போத்தீஸ் ராமசாமி மற்றும் வணிகர்க‌ள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை மா.நடராஜன் மாரியம்மாள் வரவேற்றனர். விழா ஏற்பாடுகளை பொதுமேலாளர் மாணிக்க செல்வம் மற்றும் கிளை மேலாளர்கள் செய்திருந்தன‌ர். 
மண் பானையில் தயார் ஆகும் கிராமிய உணவு வகைகள்

புதிய ஓட்டல் தாமிராவின் சிறப்பு குறித்து ஆத்தூர் மணி குழுமங்களின் தலைவர் ஆத்தூர்.மா.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  எங்களது ஓட்டல் தாமிராவில், கிராமிய பாரம்பரிய சுவையில் செட்டி நாடு உணவு வகைகள், சைனீஷ், தந்தூரி, அரேபியன் உணவு வகைகள் மற்று தென்னிந்திய உணவு வகைகள் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். சிறப்பு அம்சமாக பெண்களின் கை வண்ணத்தில் பல கிராமிய உணவு வகைகள், மீன் குழம்பு ஆகியவற்றை மண் பானைகளில் தயார் செய்து வழங்குகின்றனர்.

வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப எடை போட்டும் விற்பனை செய்கிறோம். எங்களின் அனைத்து ஓட்டல்களிளும் உணவுப் பொருட்களில் உடல்நலத்திற்கு எதிரான அஜினமோட்டா, அழகுபடுத்த கலர் பொடிகள் உபயோகப்படுத்துவதில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், தாமிரா ஓட்டலில் பிறந்த நாள், கல்யாண நாள், பணி நிறைவு நாள், வளைகாப்பு  போன்ற விழாக்களில் குடும்பத்தினரின் சிறிய விருந்தோம்பல் நிகழ்ச்சிகளுக்கு பொதிகை ஏ.சி.ஹால் வசதி உள்ளது. இதில், 50பேர் அமரும் வசதி உள்ளது என்றார்.


மக்கள் கருத்து

makkalApr 16, 2018 - 11:41:00 AM | Posted IP 162.1*****

super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory