» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தடையை மீறி தலையணைக்குள் அத்துமீறும் பொதுமக்கள்

திங்கள் 16, ஏப்ரல் 2018 11:05:10 AM (IST)

தடையை மீறி தலையணைக்குள் அத்துமீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் ஒரு ஆன்மீக சுற்றுலாத்தலம். இங்குள்ள தாமிரபரணி ஆறு, தலையணை சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்தி ழுக்கும். தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்த காலத்திலும்கூட தலையணை பகுதியில் ஆழம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் சுழல் நிறைந்த ஆபத்தான பகுதியாக தலையணை அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பாபநாசம் வந்து செல்லும் சுற்றுலா பயணிகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தலையணை பகுதியில் குளிக்கும் போது ஆழமான பகுதிகளுக்கு சென்று சுழலில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழப்புகள் அதிமாகவே தலையணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று தலையணையில் குளிக்க நிரந்தர தடை விதிக்கப்பட்டதோடு அந்த பகுதிக்குள் நுழையும் வழியையும் அடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சியர் தடை விதித்து இருப்பது குறித்த அறிவிப்பு பலகை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் தலையணை செல்லும் வாயிலின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி யாரும் உள்ளே சென்று ஆபத்தில் சிக்கி உயிரிழந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் தலையணை அருகில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில் தற்போது கோடை காலம் ஆகும். இந்த காலத்தில் பாபநாசத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். அவ்வாறு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் தடையை மீறி தலையணை பகுதியில் குளிக்கின்றனர். கடந்த 4 தினங்களாக தொடர் விடுமுறை  நர்ட்கள் ஆகும். இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று பொதுமக்கள் பாபநாசத்தில் வழக்கத்தை விட அதிகளவில் வந்து குவிந்தனர்.

அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் சிலர் தடையை மீறி தலையணைக்குள் நுழைந்து ஆபத்தான பகுதிகளில் குளித்தனர். தலையணை முன்பு ஒரேயொரு போலீஸ்காரர் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்தார். அவரும் சிறிது நேரத்திற்கு பின் சென்று விட்டார். தடையை மீறி தலையணைக்குள் செல்பவர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத போலீசார் இல்லாத நிலையில் இன்று  சுற்றுலா பயணிகள் தலையணைக்குள் அத்துமீறி நுழைந்து ஆழம் நிறைந்த ஆபத்தான பகுதிகளில் குளித்தனர். 

எனவே ஆட்சியர் தடை விதித்தும் அதை மீறி செயல்பட்டதோடு ஆபத்தை உணராமல் தலையணைக்குள் அத்துமீறி நுழைந்து குளிக்கும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory