» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்பை காசிநாத சுவாமி கோவில் உழவாரப்பணி

திங்கள் 16, ஏப்ரல் 2018 12:25:42 PM (IST)

அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவிலில் உழவாரப்பணியை முருகையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் காசிநாத சுவாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பங்குனி பெருந்திருவிழா மற்றும் திருநாவுக்கரசர் திருநட்சத்திரம் விழாவை முன்னிட்டு இக்கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

காசிநாத சுவாமி கோவில் பக்தர் பேரவை சார்பில் நடைபெற்ற மஹா உழவாரப்பணி துவக்க நிகழ்ச்சிக்கு சங்கரலிங்க சுவாமி கோவிலின் அறங்காவலர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் மூத்த பொறுப்பாளர் சங்கரநாராயணன், மாநில பொருளாளர் ஆறுமுகநயினார், அரசு மருத்துவமனை முதுநிலை உதவி மருத்துவர் சண்முகசுந்தரி, கோவில் செயல் அலுவலர் சத்தியசீலன், இந்து ஆலய பாதுகாப்பு குழுவி; மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த உழவாரப்பணியை முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். அதைத்தொடரந்து காசிநாத சுவாமி கோவிலில் உழவாரப்பணிகளை மேற்கொண்டு சுத்தப்படுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory