» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஸ்டெர்லைட் ஆலையால்தான் கேன்சர் பரவுகிறதா? ஆய்வு நடத்த இந்து முன்னணி வலியுறுத்தல்

திங்கள் 16, ஏப்ரல் 2018 12:48:27 PM (IST)

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால்தான் கேன்சர் பரவுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்" என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் விபி ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு : தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால்  ஸ்டெர்லைட் ஆலை தற்சமயம் மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும், நிரந்தரப் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகி்ன்றனர். 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால் அந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். அதுமட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் சிறந்த மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்குள்ள மக்கள் அனைவருக்கும் கேன்சர் உள்ளதாக சித்தரித்து தகவல் பரப்பி வருகிறார்கள். அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, ஸ்டெர்லைட் ஆலையால்தான் கேன்சர் பரவுகிறதா என மருத்துவக்குழு அமைத்து ஆய்வு செய்து மக்களுக்கு தெளிவு படுத்தி மக்களின் பயத்தை போக்க வேண்டும். 

மேலும், தூத்துக்கு மக்களின் அறவழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில், ஒரு சில அன்னிய  சக்திகள் வாகனங்களை உடைப்பது, பணியாளர்களை அடிப்பது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில் மாணவர்கள் கவனத்தை திசைதிருப்பும் வகையில் மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்திய ஒருமைப்பாட்டினை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

மாயா குமார்Apr 17, 2018 - 11:26:37 AM | Posted IP 141.1*****

இந்த அமைப்பு மக்களுக்கு பேசுகிறதா இல்ல அந்த அதிகார ஆலைக்கு இணக்கமாக பேசுகிறதா என்பது ,,,,,,,,,,,,,....?

மனிதன்Apr 16, 2018 - 03:22:41 PM | Posted IP 172.6*****

கண்டிப்பாக மூட வேண்டும்

உண்மைApr 16, 2018 - 02:43:09 PM | Posted IP 141.1*****

இந்த ஆலை தான் கேன்சர் வர முக்கிய காரணம் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் எந்த வேலைகளும் பாத்துக்கிடலாம் உயிரோட இருந்தா மக்களின் உயிர் தான் முக்கியம் அப்புறம் தான் வேலைவாய்ப்புகள் எல்லாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory