» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டிசிடபிள்யூ ஆலையை மூடக்கோரி ஆட்சியரிடம் மனு

திங்கள் 16, ஏப்ரல் 2018 12:54:47 PM (IST)

காயல்பட்டினம் நகரில் இயங்கி வரும் டிசிடபிள்யூ தொழிற்சாலையை மூடக்கோரி மக்கள் உரிமைநிலை நாட்டல் மற்றும் வழிகாட்டும் அமைப்பு துாத்துக்குடி மாவட்டஆட்சியர்க்கு மனு அளித்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் மக்கள் உரிமைநிலை நாட்டல் மற்றும் வழிகாட்டும் அமைப்பு சார்பில் துாத்துக்குடி ஆட்சியர்க்கு அளிக்கப்பட்ட மனுவில் கூறியதாவது,துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில் இயங்கி வரும் டிசிடபிள்யூ தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பெரியஅளவில் பாதிக்கப்பட்டது.பாெதுமக்களும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகள் இயங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி காலாவதியாகி விட்டது.இருப்பினும் அனுமதியின்றி காஸ்டிக்சோடா பிரிவு இயங்கி வருகிறது.

மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே விதித்திருந்த கட்டுபாடுகளான சென்னை ஐஐடி மூலம் சுற்று சூழல் ஆய்வுகள் மேற்கொ ள்ளப்பட வேண்டும். மற்றும் மதிப்பிற்குரிய ஒரு மருத்துவஅமைப்பு மூலம் உடல்நல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். என்ற விதி முறையும் செயல்படுத்தப்படாமலேயே பிவிசி மற்றும் சிபிவிசி பிரிவுகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டது.அந்த அனுமதியும் காலாவதியாகிவிட்டது. எனவே சுற்றுசூழலுக்கு பல விதங்களில் கேடு விளைவித்துள்ள டிசிடபிள்யூ தாெழிற்சாலையை உடனே மூட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

SureshApr 17, 2018 - 09:47:01 AM | Posted IP 162.1*****

Intha tholirchalai suttru vattara makkalal iyangi varugirathu thalaimurai thalaimuraiyaga suttru vattara giramathu makkalal thaan ingu vellai parkiraargal ithai alikka ninaipavarkal 1959 il irunthu uruvaana intha vaalvatharathai alika vendum endraal atharku oru 5000 makkalal alithuvidungal

சேவியர்Apr 16, 2018 - 09:27:36 PM | Posted IP 141.1*****

ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள். தமிழக முன்னேற்றத்தை விரும்பாத சுயநலவியாதிகள்

IndianApr 16, 2018 - 08:13:42 PM | Posted IP 141.1*****

பணம் கொடுத்தால் கான்செர் எல்லாம் மாயம் .

கீதாApr 16, 2018 - 04:37:18 PM | Posted IP 141.1*****

ஆரம்பித்தானுக இனி கான்செர் எல்லாம் இங்க இருந்து தன வருதுன்னு சொல்வானுங்க எல்லாம் phd முடிச்சுட்டு தான் போராடவே வர்ரானுங்க

தமிழன்Apr 16, 2018 - 04:06:34 PM | Posted IP 172.6*****

அப்படியே தூத்துக்குடியில் உள்ள எல்லா தொழிற்சாலைகளையும் மூடிருங்கப்பா....ஐயோ ஐயோ என்னத்த சொல்ல ....

மக்கள்Apr 16, 2018 - 02:34:30 PM | Posted IP 141.1*****

கண்டிப்பாக மூடப்பட வேண்டும் காயல்பட்டினத்தில் கேன்சர் நோயாளிகள் பெருகிக்கொண்டே போகிறார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory