» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் சமூகநீதி பாதுகாப்பு பொதுக்கூட்டம்

திங்கள் 16, ஏப்ரல் 2018 1:16:09 PM (IST)நெல்லையில் நேதாஜி சுபாஷ் சேனையின் சார்பாக  சமூக நீதி மற்றும் பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு நேதாஜி சுபாஷ் சேனையின் நிறுவனரும் மாநில தலைவருமான வழக்குறைஞர் மகாராஜன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சுப்புராமன், மாநில இளைஞரணி தலைவர் கலைஞர்பாண்டியன், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் நெல்லை சுரேஷ், மேற்கு மாவட்ட தலைவர் பூசைதுரை, மாநில ஆன்மீக தலைவர் குருஜீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் தலைமை தாங்கி சிறப்பு ரையாற்றினார். 

மாவட்ட இளைஞரணி தலைவர் வக்கீல் மணிகன்டன், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மாநகர தலைவர் வல்லநாடு சிவசிதம்பரம், மாநகர செயலாளர் ராஜேந்திரன், மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் கார்த்திக், நெல்லை மாநகர இளைஞரணி தலைவர் மணிபாண்டியன், மற்றும் மாநகர மகளிரணி செயலாளர் விஜி உட்பட சுமார் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory