» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முன்னாள் படைவீரர்கள் குழந்தைகளுக்கு ஆட்சியர் அழைப்பு

திங்கள் 16, ஏப்ரல் 2018 6:14:48 PM (IST)

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான தேர்வுக்கு விண்ண ப்பிக்கலாம் என நெல்லை மாவட்டஆட்சியர் சந்திப்நந்துாரி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், இராணுவத்தில் அலுவலராக நியமனம் பெற CDS / AFCAT ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சியினை இணையதளம் வாயிலாக வழங்கப்படவுள்ளது. 

பாெறியியல் பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முடித்த கல்லூரி இறுதியாண்டு பயின்று கொண்டிருக்கும் முன்னாள் படைவிரர்களின் சிறார்கள், அவர்கள் இருப்பிடத்திலிருந்து www.exweletutor.com என்ற இணையதளத்தின் மூலம் பயிற்சி பெறலாம். மாணவர்களுக்கு ஒவ்வொரு வார இறுதியிலும் பொது அறிவு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்கில் மாதிரி தேர்வு நடைபெறும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்னர் படைவீரர்களின் தகுதியுடைய சிறார்களுக்கு login ID மற்றும் பாஸ்வேர்ட் தனித்தனியாக அளிக்கப்பட்டு அன்னாரின் பயிற்சி வகுப்பின் முன்னேற்றம், தகுதி படைத்த கல்வி யாளர்களால் கூர்மையாக கண்காணிக்கப்பட்டு தேவைப்படும் வழிகாட்டுதல் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்படும்.

06 மாத ஆன்லைன் வகுப்பிற்கு பின் 10 நாட்கள் முன்னாள் படைவீரர் நல இயக்ககம் சென்னையில் நேரடி பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டு, நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தப்படுவார்கள்.இப்பயிற்சியில் முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு திருநெல்வேலி  மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory