» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீரன் சுந்தரலிங்கத்தின் 248ஆவது பிறந்த தின விழா

திங்கள் 16, ஏப்ரல் 2018 6:29:37 PM (IST)வீரன் சுந்தரலிங்கத்தின் 248ஆவது பிறந்த தின விழா நெல்லையில் கொண்டாடப்பட்டது.

நெல்லை சந்திப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவரது உருவ படத்திற்கு தமிழகம் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுவன தலைவர் ஜான்பா ண்டியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதில் அக்கட்சியின் மாநில துணை பொது செயலாளர் நெல்லையப்பன் ,மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர் , மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தென் மணடல செயலாளர் அழகர்சாமி உட்பட ஏராளமமானோர் கலந்து கொண்டனர்.

அது போல் நெல்லை சந்திப்பு சிந்து பூந்துறையில் ராஜ்ய மள்ளர் கட்சி சார்பில் சுந்தரலிங்கம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது,இதில் ராஜ்ய மள்ளர் கட்சி நிறுவனர் எம்.சி.கார்த்திக்,வீரன் சுந்தரலிங்கம் மக்கள் இயக்க நிறு வனர் மாரியப்ப பாண்டியன் மற்றும் பல்வேறு அமைப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory