» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செல்போனில் ஆபாசபேச்சு : காவலர் தற்கொலை

திங்கள் 16, ஏப்ரல் 2018 8:18:22 PM (IST)

நெல்லை அருகே செல்போனில் பெண்ணுடன் ஆபாசமாக பேசியது அம்பலமானதால் காவலர் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் ரெயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்த வர் வனமுத்து. இவரது மகன் கருத்த பாண்டி ( 39). கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் இவர் தற்போது குடும்பத்துடன் சேர்ந்தமரத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கருத்தபாண்டி சம்பவத்தன்று சேர்ந்தமரம் அருகே வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடையநல்லூர் பகுதியில் கருத்தபாண்டி பணியில் இருந்தபோது அங்கு பைக்கில் மணல் கடத்தி சென்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அந்த வாலிபரின் மனைவி கருத்தபாண்டியிடம் எனது கணவரை விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார்.தொடர்ந்து கருத்தபாண்டி அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கிவைத்து கொண்டு அடிக்கடி பேச்சு கொடுத்துள்ளார். சில சமயங்களில் ஆபாசமாகவும் பேசினாராம். இதை செல்போனில் பதிவு செய்த அந்த பட்டதாரி இளம்பெண் மாவட்ட எஸ்பி., அருண் சக்திகுமாரிடம் சென்று எனக்கு செல்போனில் ஆபாசமாக பேசி ஏட்டு கருத்தபாண்டி தொந்தரவு செய்கிறார் எனக்கூறி செல்போன் பேச்சு பதிவுகளை அவரிடம் கொடுத்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி, உத்தரவிட்டார். இதனால் அவமானம் அடைந்த கருத்தபாண்டி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory