» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் செயின்பறிப்பு

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 12:16:56 PM (IST)

திருநெல்வேலி பெருமாள்புரம் மற்றும் தென்காசியில் நேற்று இரவு நள்ளிரவு வீடு புகுந்து தாலிச்செயின் திருடப்பட்டுள்ளது

திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதி திருமால் நகரை சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி வசந்தி (53). நேற்று இரவு வீட்டின் பின்பக்க தகவை திறந்து வைத்து விட்டு துாங்கி கொண்டிருந்துள்ளனர்.இதை பயன்படுத்தி நள்ளிரவு அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் வசந்தி கழுத்திலிருந்த சுமார் 8 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மாயமாகிவிட்டார்.இது குறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அது போல் தென்காசி கணக்குபிள்ளை வலசை பகுதியை சேர்ந்த முத்துமராமன் என்பவரது மனைவி மஞ்சுளாதேவி (40).இவரும் நேற்றிரவு காற்றுக்காக தனது வீட்டின் முன்கதவை திறந்து வைத்து துாங்கியுள்ளார்.அப்போது மர்மநபர் அத்துமீறி நுழைந்து மஞ்சுளாதேவி கழுத்திலிருந்து சுமார் 4 பவுன் தாலி செயினைற பறித்து கொண்டு தப்பியோடி விட்டார்.இது குறித்த புகாரின் பேரில் இலத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory