» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நாள் விழா: பல்கலை பதிவாளர் பங்கேற்பு

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 1:19:56 PM (IST)பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நாள் விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் கலந்து கொண்டார்.

பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியில் 2018ம் ஆண்டிற்கான கல்லூரி நாள் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் .அழகப்பன் கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார்.  திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். அப்போது அவர் மாணவர்கள் வாழ்வில் முன்னேற உண்மையும்,  உழைப்புமே உறு துணையாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற மாணவர்கள் தங்கள் ஆங்கிலப் புலமையை வளர்க்க வேண்டும் என்று பேசினார்.
 
பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் முதலிடம் பெற்ற  இளங்கலை ஆங்கிலவகுப்பு மாணவி சசிபிரியா மற்றும் பல்வேறு பாடப்பிரிவுகளில் பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டுதல்களும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. அறக்கட்டளை மற்றும் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர்படை திறன் போட்டிகளி;ல் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மூன்றாமாண்டு வரலாற்றுத்துறை மாணவி முத்துமாரிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.  

விழாவில் துறைத்தலைவர்கள் சிவசங்கர், முருகேசன், ரவிசங்கர், ராஜசேகரன், சிதம்பரநாதபிள்ளை, பேராசிரியாகள்; ரவிசங்கர், சண்முகசுந்தரம், சேக்முஜிபுர் ரகுமான், ஜெபமணிசாமுவேல், க்யூபா,. முத்து க்கிருஷ்ணம்மாள் , ரேவதி ஆகியோர் தங்களது துறையில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களின் பட்டியலை வாசித்தார்கள்.  தமிழ்த்துறைத் தலைவர் சிவசங்கர்  விழாவினை தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள்,  பேராசிரியர்கள், சுயநிதி பாடப்பிரவு இயக்குநர் கார்த்திகேயன் நிர்வாக அதிகாரி .நடராஜன், மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory