» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு ? : நெல்லை ஆட்சியர் தகவல்

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 5:59:30 PM (IST)குடிநீர் தேவை இருப்பை பொறுத்து மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்துாரி தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம். விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதிகளுக்குட்பட்ட நலி வடைந்த மக்களுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அம்பாசமுத்திரம் ஏவிஆர்எம்வி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முருகையாபாண்டியன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு அம்பாசமுத்திரம் நகராட்சியில் ரூ.5.73 கோடி மதிப்பில் 191 வீடுகள் கட்ட ஆணைகளையும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் ரூ.8.13 கோடி மதிப்பில் 271 வீடுகள் கட்ட ஆணைகளையும் வழங்கினார்.

அப்போது பேசிய ஆட்சியர் சந்தீப்நந்தூரி வாகைக்குளம் பகுதியில் நலிவடைந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் ரூ.21.45 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. அம்பாசமுத்திரம் நகராட்சியில் ரூ.43.65 கோடியில் 1455 வீடுகளும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் ரூ.41.85 கோடி மதிப்பில் 1395 வீடுகள் கட்டுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்குரிய பணிகள் நடைபெற்று வருகின்றன. 

சிவந்திபுரம் ஊராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலைக்கு செல்லும் மலைப்பாதை ரூ.2.5 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்இருப்பு நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீருக்கு  பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே குடிநீர் தேவையை பொறுத்தும் நீர் இருப்பை பொறுத்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து ஆலோசிக்கப்படும். குடிநீருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும். விதிமீறி அதிக கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாபநாசம் தலையணையில் பாதுகாப்பு பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பினனர் அங்கு பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படும் என்றார். முன்னதாக அம்பாசமுத்திரம் நகராட்சி 21வது வார்டு வேலாயுதபுரம் பகுதியில் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலை கடையை ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory