» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் தீக்குளிப்பு முயற்சி

திங்கள் 30, ஏப்ரல் 2018 11:03:15 AM (IST)

திருநெல்வேலி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இன்று மீண்டும் ஒரு தீக்குளிப்பு முயற்சி நடைபெற்றது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெறுகிறது.எனவே இன்று காலை 8 மணி அளவில் ஆட்சியர் அலுவலக வாசலுக்கு வந்த பெரியூரைச் சேர்ந்து ராஜவேலு என்பவர் தீடீரென மண்ணெண்ணெய் கேனை கையில் எடுத்துள்ளார். 

இதை பார்த்ததும் உடனே சுதாரித்த எஸ்ஐ சுப்பையா அதனை தட்டிப்பறித்து அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி பாளையங்கோட்டை காவல்நிலையம் அழைத்து சென்றார். கந்துவட்டி கொடுமையால் அவர் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து இது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory