» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டாஸ்மாக்கை மூடாவிட்டால் ஆவியாக வருவேன் : திருநெல்வேலியில் மாணவன் தற்கொலை

புதன் 2, மே 2018 10:36:41 AM (IST)

நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் 12 ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து காெண்டார் .தன் மரணத்திற்கு பிறகும் டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் ஆவியாக வருவேன் என பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு தற்கொலை செய்துகொண்ட மாணவன் பரபரப்பு கடிதம் எழுதி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை சங்கரன்கோவில் அடுத்த குருக்கள்பட்டியை சார்ந்தவர் மாடசாமி கூலி தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவரது மகன் தினேஷ் நல்லசிவன் நேற்று (01.05.18) மாலையில் அப்பாவுடன் குடித்து விட்டு வந்ததால் சண்டையிட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினார் .நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழி சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தூங்கிக் கொண்டிருந்தார் .அந்த வழியாக உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .

அங்கு வந்த காவல் துறையினர் தீயணைப்புத்துறை உதவியுடன் உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.அவர் கொண்டு வந்த பையை சோதனையிட்ட போது அதில் நீட் தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை அனுமதி சீட்டு 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலோடு தந்தைக்கு மகன் மனமுடைந்த நிலையில் எழுதப்பட்ட கடிதமும் மீட்கப்பட்டது .

அதில் நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு . தந்தை குடிப்பதால் தான் இறந்த பிறகு எந்த காரியமும் செய்யக் கூடாது .தன்னுடைய சித்தப்பா தான் அனைத்து காரியங்களும் செய்ய வேண்டும் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது மேலும் இனிமேலாவது தந்தை குடிக்காமல் இருக்க வேண்டும் அப்போது தான் தன ஆத்மா சாந்தியடையும் என்றும் எழுதப்பட்டிருந்தது .அதில் கடைசியாக தான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர் முதல்வர் ஆகியோர் மது பானக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம் இல்லாவிட்டால் ஆவியாக வந்து மதுபானக்கடைகளை உடைப்பேன் என்றும் எழுதப்பட்டிருந்தது


மக்கள் கருத்து

ஒருவன்மே 2, 2018 - 03:30:13 PM | Posted IP 162.1*****

உயிரோடு இருக்கும்போதே மதுப்பானை கடைகளை எதிர்த்து போராடலாமே, உடைக்கலாமே..... மனிதனுக்கு சாதிக்க நிறைய இருக்கு , ஏன் உயிரை விட்டாய் ??

கம்ப்யூட்டர் பொறியாளர்மே 2, 2018 - 03:18:11 PM | Posted IP 162.1*****

RIP

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory