» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விஜயநாராயணம் ஏட்டு ஜெகதீசன்துரை கொலை வழக்கு : முக்கியகுற்றவாளி முருகன் கைது

சனி 12, மே 2018 1:31:24 PM (IST)

நெல்லையில் காவலர் ஜெகதீஷ் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முருகன் என்பவரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் ஜெகதீஷ் துரை. இவர் மணல் கடத்தல் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வடக்கு விஜய நாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏற்கனவே 5 பேரை கைது செய்து உள்ளனர். 

மேலும் இந்த கொலையில் தொடர்புடைய தாமரைகுளத்தை சேர்ந்த முருகன், ராதாபுரம் தாலுகா கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த அமிதாபச்சன் (27), தங்கவேலு (30) ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில், அமிதாபச்சன் நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு ராம்தாஸ் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைத்து வருகிற 14-ந்தேதி நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். 

இதையடுத்து அமிதாபச்சனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இதற்கிடையே, இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகன் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அவரை பிடிக்க அங்கு விரைந்தனர். அவர்கள் தொடர்ந்து அங்கு முகாமிட்டு முருகனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் முருகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory