» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை நீதிமன்றத்தில் ராக்கெட்ராஜா ஆஜர் : கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்

செவ்வாய் 15, மே 2018 5:40:00 PM (IST)

நெல்லை வன்கொடுமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராக்கெட் ராஜா மீணடும்கோவை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து செல்லபட்டார்

நெல்லை பாளையங்கோட்டை அண்ணா நகரில் கடந்த பிப்ரவரி மாதம் தனியார் கல்லூரி பேராசிரியரான செந்தில் குமார் என்பவர் நிலப் பிரச்சனையில் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 வது குற்றவாளியாக கூறப்படும் ராக்கெட் ராஜா தலைமறைவு ஆனார். கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்டராக்கெட்  ராஜா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் நீதிபதி சந்திரா முன்பு ஆஜர்படுத்தினர்.  

ராஜாவை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ராக்கெட்ராஜாவுக்க ஒரு நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் நெல்லை வன்கொடுமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு கோவை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து செல்லபட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory