» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாழையூத்தில் அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது : ராக்கெட்ராஜா கைது செய்யப்பட்டதால் ஆத்திரம்

செவ்வாய் 15, மே 2018 5:44:43 PM (IST)திருநெல்வேலி வடக்கு தாழையூத்தில் ராக்கெட் ராஜா கைதை கண்டித்து அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நெல்லை சந்திப்பில் இருந்து தாழையூத்துக்கு இன்று ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. பஸ்சை ஓட்டுனர் பரமசிவன் ஓட்ட கண்டக்டராக சின்னப்பன் இருந்தார். பஸ்சில் 10 பயணிகளே இருந்ததாக கூறப்படுகிறது. இதில் பஸ் தாழையூத்து தென்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார்பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பஸ்சை வழி மறிக்க பரமசிவன் பஸ்சை நிறுத்தினார்.

பஸ்சில் ஏறிய மர்ம நபர்களில் ஒருவர் டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து பஸ்சை ஓரமாக ஓட்டி செல்லுமாறு மிரட்ட டிரைவர் பஸ்சை ரோட்டோரமாக நிறுத்தினார். மற்றொரு நபர் பயணிகளிடம் பஸ்சுக்கு தீ வைக்க போகிறோம் என கூற பயணிகள் அனைவரும் பயந்து போய் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர்.

இதையடுத்து மர்ம நபர்கள் 2 பேரும் பஸ்சின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். பஸ் கொளுந்து விட்டு எரிந்த போது அந்த மர்ம நபர்கள் ராக்கெட் ராஜாவை விடுதலை செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களையும் வீசியவாறும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இது பற்றி தகவல் கிடைத்ததும் நெல்லை மாவட்ட எஸ்பி., அருண் சக்திகுமார், தாழை யூத்து துணை எஸ்பி பொன்னரசு மற்றும் போலீசார் அதிரடி படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory