» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழ்ச் செம்மல் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

புதன் 16, மே 2018 10:42:34 AM (IST)

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, 2018-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு மாவட்டங்களில் தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் அமைப்புகள் வைத்து அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில்  (‌w‌w‌w.‌t​a‌m‌i‌l‌v​a‌l​a‌r​c‌h‌i‌t‌h‌u‌r​a‌i.​c‌o‌m)  இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பதாரர்கள் தங்களின் தனி விவரக் குறிப்பு, 2 போட்டாே, தாங்கள் ஆற்றிய தமிழ்ப் பணி ஆகிய விவரங்களுடன் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் அலுவலகங்களில் வரும் ஜூன் 4-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory