» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் 15 வட்டங்களில் ஜமாபந்தி : 18 ம் தேதி நடக்கிறது

புதன் 16, மே 2018 11:01:16 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களில் நாளை மறுநாள் (18-ஆம் தேதி) வருவாய்த் துறை தீர்வாயம் (ஜமாபந்தி) தொடங்குகிறது.

இதுதொடர்பாக நெல்லைஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் 1427 பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும் 18-ஆம் தேதி முதல் 15 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. திருநெல்வேலி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு நிகழ்ச்சி நிரலில் உள்ளவாறு மாவட்ட ஆட்சியர் நான்குனேரி வட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர் பாளையங்கோட்டை வட்ட த்திலும் வருவாய்த் தீர்வாயம் நடத்த உள்ளனர்.

ராதாபுரம் வட்டத்தில் சேரன்மகாதேவி சார் ஆட்சியரும், சங்கரன்கோவில் வட்டத்தில் திருநெல்வேலி கோட்டாட்சியரும், ஆலங்குளம் வட்டத்தில் தென்காசி கோட்டாட்சியரும், சேரன்மகாதேவி வட்டத்தில் ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளரும் (பொது), திருநெல்வேலி வட்டத்தில் ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளரும் (நிலம்) , தென்காசி வட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலரும், வீரகேரளம்புதூர் வட்டத்தில் தனித் துணை ஆட்சியரும் (நதிநீர் இணைப்பு) வருவாய்த் தீர்வாயம் நடத்துகின்றனர்.

செங்கோட்டை வட்டத்தில் தனித் துணை ஆட்சியரும் (முத்திரை), திருவேங்கடம் வட்டத்தில் திருநெல்வேலி ஆய்வுக் குழு அலுவலரும், கடையநல்லூர் வட்டத்தில் தாட்கோ மாவட்ட மேலாளரும், சிவகிரி வட்டத்தில் வாசுதேவநல்லூர் தரணி சுகர்ஸ் மற்றும் கெமிக்கல் நிறுவனத்தின் வடிசால் அலுவலரும், அம்பாசமுத்திரம் வட்டத்தில் திருநெல்வேலி உதவி ஆணையரும் (கலால்), மானூர் வட்டத்தில் பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையரும் வருவாய்த் தீர்வாயத்தை நடத்துகின்றனர். எனவே அந்தந்த வருவாய் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory