» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நடைபயிற்சி செய்த பெண்ணிடம் செயின்பறிப்பு : வீரவநல்லுார் போலீஸ் விசாரணை

புதன் 16, மே 2018 12:26:54 PM (IST)

வீரவநல்லூரில் வீட்டு முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

வீரவநல்லூர் கிளாக்குளம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (66) ஜோதிடர். இவருடைய மனைவி  விஜயா (62). இவர் தினமும் காலையில் தனது வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாம். அதுபோல் சம்பவத்தன்றும் காலை 7 மணி அளவில் தனது வீட்டின் முன் விஜயா நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது, அந்த வழியாக மோட்டார்பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென விஜயா கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயா அலறி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கு இருந்து மோட்டார்பைக்கில் தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து வீரவநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மநபர்கள் பறித்து சென்ற சங்கிலியின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory