» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரன்கோவிலில் விசைத்தறி தாெழிலாளர்கள் மறியல்

புதன் 16, மே 2018 12:47:52 PM (IST)

சங்கரன்கோவிலில் விசைத்தறி தாெழிலாளர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் பிரதான முக்கிய தொழில் விசைத்தறி தாெழில். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களின் ஒப்பந்தம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு தற்போது முடிவடைந்தது. இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ 300 வழங்கக்கோரி கடந்த ஏப்ரல் 30-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி  இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory