» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலிக்கு நாளை கமல்ஹாசன் வருகை

புதன் 16, மே 2018 7:25:25 PM (IST)

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நாளை நெல்லை மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டத்தில் காவல்கிணறு, வள்ளியூர், திசையன்விளை, உவரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.

அது போல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லை நகரில் பாளை தெற்கு பஜார், மேலப்பாளையம் சந்தை விலக்கு, கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு,  நெல்லை டவுன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார். பின்பு ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன் கோவில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்கிறார். 18-ந்தேதி பிற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory